இளைய தளபதியே
இனிய தளபதியே
நாளைய தீர்ப்பே உன் வருகை
ரசிகன் கண்டாள் இந்த ரசிகை
செந்தூரப் பாண்டியாக, தேவாவாக உருவெடுத்தாய்
ராசாவின் பார்வையாலே என்னுள்ளே
விஷ்ணுவாக அவதரித்தாய்
சந்திரலேகாவைக் கண்ட
கோயம்புத்தூர் மாப்பிள்ளையே - இந்தப்
பூவே உனக்காகத்தான்
வசந்த வாசலும் உன் வருகைக்ககத்தான்
தமிழ்த் திரையின் மாண்புமிகு மாணவனே
செல்லமான செல்வாவே
உன்னைச் சந்திக்க
காலமெல்லாம் காத்திருப்பேன்
உன்மீது கொண்ட அன்பு
அந்த லவ் , டுடே மட்டுமல்ல
ஒன்ஸ்மோர் என்று கேட்கும் ஓயாது- உன்னை
நேருக்கு நேர் சந்திக்கும் ;ஆவலோடு
அந்த அன்புக்கு
காதலுக்கு மரியாதை தந்தாய்
கனவில் நான் நினைத்தேன் வந்தாய் நீ
பிரியமுடன் கை குலுக்கினாய்
நிலாவே வா என்றேன்
இதைப் பார் என்றேன்
துள்ளாத மனமும் துள்ளியது
என்றென்றும் காதல் வேண்டும் என்றேன்
நெஞ்சினிலே அன்பை ஊட்டிய மின்சாரக் கண்ணாவே - என்
கண்ணுக்குள் நிலவானாய்
இன்னும் குஷியானேன்
பிரியமானவளே என்று அழைப்பாய்
என எதிர்பார்த்தேன்
நட்புடன் பிரண்ட்ஸ் என்றாய் - என்
காதலைக் கத்தரித்த பத்ரியே
அன்புக்கு அதிசியம் காட்டிய ஷாஜஹானே
தமிழன் உணர்வை ஊட்டுகின்ற யூத்தே
பகவதி பெயர் சொல்லும் வசீகராவே
புதிய கீதை சொன்ன திருமலை நாயகனே
உதயாது என்னுள்ளே காதல் என்று
தள்ளி நிற்கும் கில்லியே
நான் விரும்பும் மதுர மல்லியே
திருப்பாச்சி அரிவாளுடன
உன் உருவம் கண்டு நான் திகைத்தேன்
சச்சின் போன்ற சாதனை நாயகனே
சிவகாசி பட்டாசாய் நீ வெடிக்கையிலே
என்னுள்ளம் சொல்லியது
ஆதியிலே நீ போக்கிரி இல்லை
அழகிய தமிழ் மகன் நீ
வேட்டைக்காரன் வில்லுக்குச் சிக்காத குருவி நீ
ஆனந்தம் அள்ளித்தரும் அருவி நீ
தமிழ்த் திரை உலகையே உலுக்கிடும் சுறா நீ என்று
அந்த உராய்வில் கண் விழித்தேன்
என் கண்ணெதிரே வேலாயுதம் ஏந்திய காவலனாக
என் இளைய தளபதி