Friday, 3 June 2011

ரஜினியை பற்றி விஜய்


VIJAY
நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். பல்வேறு அமைச்சர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தொடர்ந்து அவர் சீக்கிரம் நலம் பெற வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் விஜய், ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்த கேள்விக்கு " 'வீட்ல ஒருத்தருக்கு உடம்பு சரி இல்லாத மாதிரி ஒட்டுமொத்தத் திரையுலகமும் கவலையில் இருக்கோம். யாரைச் சந்தித்தாலும், பேச்சு ரஜினி சார்ல ஆரம்பிச்சு, ரஜினி சார்ல தான் முடியுது.

பெர்சனலா நான் ரொம்ப மிஸ் பண்றேன். ஸ்க்ரீன்ல ரஜினி சாருக்கு உடம்பு சரியில்லாத மாதிரி ஸீன் வந்தாலே, கத்திக் கூப்பாடு போடுற ஆளு நான். இப்போ நிஜமாவே அப்படி ஒரு சூழ்நிலையைத் தாங்கிக்கவே முடிய லைண்ணா. சூப்பர் ஸ்டார் ரொம்ப சீக்கிரமே ஹெல்த்தியா திரும்பி வந்திருவார். 'ராணா' படத்தை ரசிகர்களோட ரசிகனா தியேட்டர்ல உக்காந்து நானும் பார்ப்பேன்!'' என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment