தனது பிறந்த நாளை ரசிகர்கள் யாரும் கொண்டாட வேண்டாம் என்றும் அதற்குப் பதில் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யுமாறும் நடிகர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "ஜூன் 22-ம் தேதி வரும் எனது பிறந்த நாளை ரசிகர்கள் யாரும் விமர்சையாக கொண்டாட வேண்டாம். அதற்குப் பதில் ஏழை எளிய மக்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவி செய்யு...ங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து இந்த ஜூன் மாதம முழுவதும் அவரது பிறந்த நாளையொட்டி நலத் திட்டங்களைச் செய்ய முடிவு செய்துள்ளனர் ரசிகர்கல்.
அதன்படி, வட சென்னையில் இன்று ஒரே நாளில் 10 விஜய் மன்றங்கள் 150 மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களையும், 75 ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலைகளையும் வழங்கினர். கார்னேசன் நகரில் ஏழைகளுக்கு உடைகள் வழங்கினர். கேசிஎஸ் கல்லூரி அருகே உள்ள 100 மாணவ மாணவிகளுக்கு இலவச பாடப் புத்தகங்கள், ஸ்கூல் பைகள் வழங்கினர்.
மேலும் அரசுப் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்ற 10 மாணவ மாணவிகளுக்கு கம்ப்யூட்டர்களை வழங்கினர். இந்த விழாவில் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் பங்கேற்றார்.
பின்னர் அவர் பேசுகையில், "விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி யாரும் எதிர்ப்பார்க்காத வலகையில் பெரிய உதவிகள் அறிவிக்கப்படும்," என்றார்.
இந்த நிகழ்ச்சியில் விஜய் மன்ற மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த், செயலாளர் ரவிராஜா, பிஆர்ஓ பிடி செல்வகுமார் ஆகியோர் பங்கேற்றனர்..

 
No comments:
Post a Comment